சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. கரோனா தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், தடுப்பு முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய தொகுப்பிற்கு புனேவில் இருந்து விமானம் மூலம் 10 பார்சல்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இதையடுத்து சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு தடுப்பூசி கொடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
சென்னை வந்தடைந்த சுமார் ஒரு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள்! - chennai district news
புனேவில் இருந்து விமானம் மூலம் 10 பார்சல்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.
சென்னை வந்தடைந்த சுமார் ஒரு லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள்
இதையும் படிங்க: புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்