சென்னை ரிப்பன் மாளிகை எதிரே தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க கட்டிடம் உள்ளது. இன்று (ஜூன் 25) காலையில் இக்கட்டிடத்தின் மேற்கூரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக பெரியமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ரிப்பன் மாளிகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - காவல்துறை
சென்னை: ரிப்பன் மாளிகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
police
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் அந்த சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இறந்தவரை பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.