பல்கலைக்கழக மானியக்குழு மத்திய, மாநில பல்கலைக்கழங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "மத்திய கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையையும், மாநில கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையையும் மாணவர் சேர்க்கை, பணியாளர் நியமனங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இட ஒதுக்கீட்டு முறையைச் சரியாகப் பின்பற்ற பல்கலைக்கழக மானியக்குழு அறிவுரை!
சென்னை: இட ஒதுக்கீட்டு முறையை மாநில, மத்திய கல்வி நிறுவனங்கள் கட்டாயம் அமல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவை பல்கலைக்கழகங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறை சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு வரக்கூடிய நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.