தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ இளைஞர்.. பொதுமக்கள் அச்சம்! - today latest news

Youth who steals women's innerwear: கிழக்கு தாம்பரம் பகுதியில் இளைஞர் ஒருவர் பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு, அவர்களது உள்ளாடைகளைத் திருடிச் செல்லும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Psycho who steals womens innerwear
சென்னையில் பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் சைக்கா வாலிபர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:43 AM IST

சென்னை: கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் கடந்த சில நாட்களாக மாஸ்க் அணிந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார். பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் உள்ளே நுழைந்து, அவர்களிடம் பாலியல் தொல்லையிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அதுமட்டும் இன்றி, பெண்கள் துவைத்து காயப் போட்டிருக்கும் அவர்களின் உள்ளாடைகளைத் திருடிக் கொண்டும் தப்பிச் செல்லும் சம்பவமும் தொடர்ச்சியாக அரங்கேறி, அப்பகுதி பொதுமக்களிடமும் பெண்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக, இரும்புலியூரில் உள்ள பழைய எம்.எஸ்.பி சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இந்த மர்ம நபரின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், நள்ளிரவு நேரத்தில் தனி ஆளாக வரும் அந்த மர்ம நபர், அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, எந்த வீட்டின் வெளியே ஆண்கள் செருப்பு இல்லாமல், பெண்கள் செருப்பு மட்டும் உள்ளதோ அந்த வீட்டில் ஆண்கள் இல்லை என்பதை அறிந்து கொண்டு, அங்கு உள்ள பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

சில நேரங்களில் பெண்கள் யாரும் இல்லாதபட்சத்தில், வெளியில் துவைத்துக் காயப் போட்டிருக்கும் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிக் கொண்டு செல்வதாகவும், இவ்வாறு அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெண்கள் விடுதிகள் என்று தொடர்ச்சியாக அந்த மர்ம நபர் தனது கைவரிசையைக் காட்டியதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்வதும், தனியாகச் சிக்கும் பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, போலீசார் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, பெண்களிடம் அத்துமீறும் சைக்கோவை கைது செய்ய வேண்டும் என்று கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், அந்த இளைஞர் குறித்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அம்பத்தூரில் போலீசாரை தாக்கிய சம்பவம்; விடிய விடிய நடந்த அதிரடி நடவடிக்கை.. இதுவரை 28 வடமாநிலத்தவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details