சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பேருந்துநிறுத்தம் அருகே உள்ள நடைபாதையில் பலர் தங்கி, யாசகம் பெற்றுவருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜூலை28) ஓட்டேரி பகுதியிலுள்ள நடைபாதையில் வசித்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயசந்திரன் என்பவர் வாலாஜா சாலை பேருந்துநிறுத்தத்திற்கு வந்துள்ளார்.
யாசகர்களுக்குள் தகராறு: ஒருவர் குத்திக் கொலை! - காவல்துறை விசாரணை
சென்னை: வாலாஜா சாலை அருகே யாசகம் பெறுபவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஒருவர் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அங்கு யாசகம் பெற்ற நபரிடம் ஜெயசந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் கோபத்தில் ஜெயசந்திரன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அந்நபரைக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்நபரை, அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி காவல் துறையினர், ஜெயசந்திரனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.