முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு சென்னை:மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக ஊழியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை (Pledge of Abolition of Untouchability) இன்று (ஜன.30) ஏற்றுக்கொண்டனர். மகாத்மா காந்தியடிகளின் 76-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதுடன், மகாத்மா காந்தியின் நினைவாக (Mahatma Gandhi Memorial Day) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியைப் படிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அதனை திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதற்கு முன்னதாக உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தலித் மக்களை ஆபசமாக பேசிய திமுக நிர்வாகி வீடியோ.. கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை