தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதித் சூர்யா வீட்டில் காவல் துறையினர் விசாரணை!

சென்னை: உதித் சூர்யா வீட்டில் இருந்த அனைவரும் தலைமறைவான நிலையில், விசாரணைக்கு நியமிக்கப்பட்ட தனிப்படையினரும், தேனி காவல் துறையினரும் சூர்யா வீட்டின் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

neet exam

By

Published : Sep 19, 2019, 10:49 PM IST

2019ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவ கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கிய நபரும், தேர்வு எழுதிய நபரும் வேறு வேறாக இருந்த நிலையில் கல்லூரி அளித்த புகாரின்பேரிலும், மருத்துவ கவுன்சிலிங் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி, சென்னை தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரிஹந்த் பேலஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் டாக்டர் வி.கே.வெங்கடேசன். இவருடைய மகன் உதித் சூர்யா. இவர் இந்தாண்டு 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளார். இவர் மகராஷ்ட்ரா மாநிலத்தில் தேர்வு எழுதி தேனியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

உதித் சூர்யா வீட்டில் காவல்துறையினர் விசாரணை!

இதற்கிடையில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்தபோது விண்ணப்பத்தில் வைக்கப்பட்ட புகைப்படமும், அவருடைய புகைப்படமும் வித்தியாசமாக இருந்ததைத் தொடர்ந்து கல்லூரி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ கல்வி இயக்குனர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டபோதுதான் தேனி மருத்துவ கல்லூரியில் இருந்து விலகி கொள்வதாக உதித் சூர்யா கடிதம் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள உதித் சூர்யா வீட்டில் இருந்த அனைவரும் தலைமறைவான நிலையில் இன்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட தனிப்படையினர் மற்றும் தேனி காவல் துறையினர் அவரது வீட்டுக்கு அருகாமையில் உள்ள நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக படிக்க: நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: இரண்டு பேர் மீது வழக்கு

ABOUT THE AUTHOR

...view details