சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 9 திட்டப் பகுதிகளில் நேற்று (அக்.08) ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிபேட்டை திட்டப்பகுதியில், 1979 ஆம் ஆண்டு 232 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 392 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 75 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 443 சதுர அடியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 450 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் திட்டப்பகுதியில், 1975 ஆம் ஆண்டு 326 சதுர அடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்ட 440 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 81 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 407 சதுர அடியில் தரை மற்றும் 5 தளங்களுடன் 448 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காந்தி நகர் திட்டப்பகுதியில், 1973 ஆம் ஆண்டு 326 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 496 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 83 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 417 சதுர அடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் 500 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து, எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேம்புலியம்மன் திட்டப்பகுதியில், 1976 ஆம் ஆண்டு 295 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 144 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 32 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 416 சதுர அடியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 188 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்ரிக்கரை திட்டப்பகுதியில், 1981 ஆம் ஆண்டு 233 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 144 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 32 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 410 சதுர அடியில் தூண் மற்றும் 6 தளங்களுடன் 168 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் 1983 ஆம் ஆண்டு 233 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 176 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 29 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 400 சதுர அடியில் தூண் மற்றும் 6 தளங்களுடன் 2 தொகுப்புகளும் தரை மற்றும் 4 தளங்களுடன் 1 தொகுப்பும் 170 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையடுத்து, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிமான்ய திட்டப்பகுதியில் 1975 ஆம் ஆண்டு 224 சதுர அடியில் தரை மற்றும் 2 தளங்களுடன் கட்டப்பட்ட 480 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத்தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 118 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 433 சதுர அடியில் தூண் மற்றும் 13 தளங்களுடன் 702 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் 1978 ஆம் ஆண்டு 250 சதுர அடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்ட 250 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 41 கோடியே 08 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 410 சதுர அடியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 252 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பருவா நகர் திட்டப்பகுதியில் 1992 ஆம் ஆண்டு 180 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 340 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 61 கோடியே 13 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 433 சதுர அடியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 360 புதிய குடியிருப்புகள் என ஆக மொத்தம் 9 திட்டப்பகுதிகளில் ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் 3238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒடிசாவில் நிர்வாணமாக நடந்து சென்ற பழங்குடியின பெண்களை மீட்ட எம்எல்ஏ..! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தகவல்!