தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன்- உதயநிதி ஸ்டாலின் - சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udayanithi
udayanithi

By

Published : Mar 8, 2021, 7:07 PM IST

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் தடகள வீரருமான சுப்பரமணியன் எழுதிய 'ஓடலாம் வாங்க' புத்தகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடார். இந்த புத்தகத்தை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.

இதன் பின் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆசை உள்ளது. அந்த தொகுதியை ஒதுக்கினால் வெற்றி பெறுவேன். . ஆனால் அதை தலைவர் தான் முடிவு செய்வார். நேர்காணலில் "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "எதற்கு இங்கு வந்தாய்? நேராக சேப்பாக்கம் சென்று வேலையை பார் என்றார். அதே போல் ஆ.ராசா, "எவ்வளவு செலவு செய்வாய் என்று கேட்க, என் தந்தை கொடுக்கும் பணம் அனைத்தையும் செலவு செய்வேன் என்றேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details