தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டத்தை மதிக்காமல் தூத்துக்குடி சென்றுள்ளார் உதயநிதி - அமைச்சர் ஜெயக்குமார் - கரோனா தடுப்பு மருத்துவ முகாம்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் சட்டத்தை மதிக்காமல், அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் தூத்துக்குடி சென்றுள்ளார் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

udayanidhi stalin violate curfew rules said minister jayakumar
udayanidhi stalin violate curfew rules said minister jayakumar

By

Published : Jun 29, 2020, 3:58 PM IST

சென்னை ராயபுரம் மண்டலத்திலுள்ள தம்பு செட்டி தெரு பகுதிகளில் கரோனா தடுப்பு மருத்துவ முகாமை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக திருநங்கைகள் இணைந்து கரோனா வைரஸிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியும் தகுந்த இடைவெளியை பின்பற்றியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியினைத் தொடங்கிவைத்து அமைச்சர் ஜெயக்குமார் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராயபுரம் மண்டலத்தில் தினமும் நான்காயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக அளிக்கப்படுகிறது.

மக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவது, தேவையின்றி வெளியே செல்லாமல் இருப்பது மூலம் கரோனாவை கட்டுப்படுத்தலாம். மக்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கரோனா இல்லாத மாநிலமாக மாற முடியும்.

சென்னையில் உள்ள இரண்டாயிரம் குடிசைப் பகுதிகளில் மைக்ரோ திட்ட அடிப்படையில் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம். மாத்திரை மூலமாகவும், உணவு மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

நமக்கு பிரச்னை வரக்கூடாது. நம்மால் மற்றவருக்கு பிரச்னை வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே ஐந்து நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனா பரிசோதனை செய்துகொண்டு, கரோனா தொற்று இல்லை என்று உறுதியான பின்புதான் வெளியே வர ஆரம்பித்தேன்.

உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி செல்வதற்கு சென்னையிலும் தூத்துக்குடியிலும் எந்த அனுமதியும் பெறாமல் சட்டத்தை மதிக்காமல் சென்றுள்ளார் இதற்கான விளக்கத்தை அவர் தர வேண்டும் ” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details