சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசார்பேட்டை மார்க்கெட் பகுதியில், இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பர்தா அணிந்து நின்ற இரண்டு இளம் பெண்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.
இருசக்கர வாகனங்களைத் திருடிய 2 இளம்பெண்கள் கைது - women two wheeler theft case
சென்னை: இருசக்கர வாகனங்களை திருடி வந்த இரண்டு இளம்பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில் ஒருவர் பெயர் ரீயானா (18) என்றும் மற்றொருவர் பர்கீன் ஜெக்ரா (19) என்றும் தெரியவந்தது. இருவருக்கும் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால், தனியாக அறை எடுத்து தங்கியுள்ளதாகவும் சென்னையிலுள்ள பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை இருவரும் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பர்தா அணிவதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இவர்கள் இதுபோன்ற திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்துள்ளனர் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு பெண்களிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தண்ணீர் கேட்பதுபோல் நடித்து செயின் பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை