சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இந்த புகார் அடிப்படையில் ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தவமணி தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் பைக் திருடன் கைது! 15 வாகனங்கள் மீட்பு
சென்னை: கொண்டிதோப்பு பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடி வந்தவரை ஏழுகிணறு காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து பதினைந்து இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
two-wheeler-thief
இந்நிலையில் சாலிகிராமம் தசரத புரத்தைச் சேர்ந்த நசீர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விசாரணையில் நசீர் பல வருடங்களாக இருசக்கர வாகனத்தை திருடிவந்தது தெரியவந்தது.
அதன் பிறகு அவர் யார் யாரிடம் இருசக்கர வாகனத்தை விற்றுள்ளார் என்பதை காவல் துறையினரிடம் வாக்குமூலமாக அளித்தார். அதனைத் தொடர்ந்து மொத்தம் பதினைந்து இரு சக்கர வாகனங்களை மீட்டனர். பின்னர், நசீர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.