தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து... செவிலியர் உட்பட இருவர் உயிரிழப்பு - அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து

சென்னை அசோக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், செவிலியர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

fire accident near chennai  two were died in fire accident  fire accident  chennai ashok nagar  ashok nagar fire accident  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து  அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து  சென்னையில் தீ விபத்து  சென்னை அசோக் நகரில் தீ விபத்து  தீ விபத்து  அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து  அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் இருவர் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

By

Published : Aug 22, 2022, 8:14 PM IST

சென்னை: அசோக்நகர் 12வது அவென்யூவில் உள்ள ஸ்ரீஜி அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் ஜானகி(92) என்பவர் தனது மகள் ஜெயா(70) உடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக தாய் ஜானகிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக ஜெயப்பிரியா(27) என்ற செவிலியரை பணிக்காக ஜெயா நியமித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று (ஆகஸ்ட் 21) நள்ளிரவு ஜானகியும், செவிலியர் ஜெயப்பிரியாவும் படுக்கையறையிலும், ஜெயா ஹாலிலும் உறங்கிக்கொண்டிருந்தபோது, மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயா கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து

தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்ற தீயணைப்புத்துறையினர், ஹாலில் மயங்கிய நிலையில் இருந்த ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுக்கையறையில் சென்று பார்த்த போது, அங்கு செவிலியர் ஜெயப்பிரியா உடல் கருகிய நிலையிலும், ஜானகி பலத்த தீக்காயங்களுடன் மயங்கிய நிலையிலும் இருந்துள்ளனர். பின்னர் ஜானகியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெயப்பிரியா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த ஜானகி இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் கடிதம் எழுதிவைத்து விட்டுப்பெண் தற்கொலை...

ABOUT THE AUTHOR

...view details