தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து இலங்கை பயணிகள் இருவர் உயிரிழப்பு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பயணிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Jul 28, 2023, 6:40 PM IST

two-sri-lankan-passengers-died-in-chennai-airport-in-succession
விமான நிலையத்தில் அடுத்தடுத்து இலங்கை பயணிகள் இருவர் உயிரிழப்பு

சென்னை:மீனம்பாக்கம் சர்வதேச புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்திலிருந்து இன்று காலை இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு செல்லும், அலையன்ஸ் ஏர் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல வந்த, இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி (43) என்ற பெண் பயணி பாதுகாப்பு சோதனை பிரிவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை பரிசோதித்த விமான நிலைய மருத்துவர்கள் அவர் மாராடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் பெண் பயணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதேபோன்று இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த ஜெயக்குமார் (48) என்பவர் மனைவியுடன் பிசினஸ் விசாவில் சென்னை வந்தார். அவர் குடியுரிமைச் சோதனை முடித்துவிட்டு சுங்கச் சோதனை பிரிவுக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதையும் படிங்க :Live :'என் மண் என் மக்கள்' யாத்திரை - ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!

இதையடுத்து சக பயணிகள் விமான நிலைய மருத்துவக் குழுவுக்குத் தகவல் கொடுத்தனர். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து பரிசோதித்தபோது அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து அவருடைய உடலையும் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு 174 பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

ஒரே நாளில் இலங்கை பயணிகள் இருவர் சென்னை விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :LGBTQI+ வரைவு சமூக நீதிக்கு எதிரானது - திருநங்கைகள் கூட்டமைப்பு சங்கம் கொந்தளிப்பு

ABOUT THE AUTHOR

...view details