தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் எதிரொலி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு - Mandous cyclone live

சென்னை மடிப்பாக்கத்தில் மாண்டஸ் புயலால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் உயிரிழப்பு
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் உயிரிழப்பு

By

Published : Dec 10, 2022, 11:31 AM IST

சென்னை:மடிப்பாக்கம் ராம்நகர் 7ஆவது மெயின் ரோட்டில் உள்ள குடிசை வீட்டில் லட்சுமி (45) மற்றும் அவரது அண்ணன் மகன் ராஜேந்திரன் (25) ஆகிய இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (டிச.9) இரவு மாண்டஸ் புயலின் காரணமாக குடிசை வீட்டில் இருந்தால் ஆபத்து எனக் கருதிய இருவரும், அருகில் உள்ள ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் உறங்கச் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு மின்சாரம் வந்துள்ளது. அந்த நேரத்தில் பாய் எடுப்பதற்காக லட்சுமி மட்டும் குடிசை வீட்டுக்கு வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த ராஜேந்திரன், லட்சுமியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது ராஜேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த மடிப்பாக்கம் காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மாண்டஸ் புயலால் சாய்ந்த மரங்கள்; மீட்புப் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details