சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும் நிலையில், நவம்பர் 1ஆம் தேதி புத்தர் சிலை உடைக்கப்பட்டு சேதமடைந்ததைப் பார்த்த ஒருவர், இது குறித்து பல்லாவரம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.
புத்தர் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது - புத்தர் சிலை சேதம்
சென்னை: பல்லாவரம் திரிசூலம் மலையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை சேதப்படுத்திய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள் திரிசூலத்தைச் சேர்ந்த வினோத்குமார் (26), ராஜி (25) ஆகிய இருவரும் சிலையை உடைத்தவர்கள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்ய காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், மது போதையில் சிலையை உடைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு உடைக்கப்பட்ட சிலையை காவல் துறையினர் ஒட்டவைத்துள்ளனர்.