தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு - புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு

கொசுவை விரட்ட வீட்டினுள் போடப்பட்ட புகை மூட்டத்தில், பெண் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். கவலைக்கிடமான முறையில் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

By

Published : Jul 22, 2021, 5:15 PM IST

சென்னை:சென்னை பல்லாவரம் அடுத்த, பொன்னி நகரில் உள்ள ஒரு வீட்டில் சொக்கலிங்கம் (61), புஷ்பலட்சுமி (55), மல்லிகா (38), விஷால் (11) ஆகிய நான்கு பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் கொசுத் தொல்லை காரணமாக புகை மூட்டம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

நேற்றும் வழக்கம்போல் புகைமூட்டம் போட்டு, நான்கு பேரும் படுத்துறங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 22) காலை, அவர்களது வீட்டிலிருந்து பெரும் புகை வெளியே வரத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மூச்சுத்திணறி உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த சங்கர் நகர் காவல் துறையினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நால்வரும் மயங்கிய நிலையில் படுத்துக்கிடந்துள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் நான்கு பேரையும் மீட்ட காவல் துறையினர், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். மீதமுள்ள மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைகாக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கொசுவை விரட்ட போடப்பட்ட புகை மூட்டத்தில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் பண மோசடி- சைபர் கிரைம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details