சென்னை:துபாயில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்பு, மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக டெல்லி புறப்படுவதற்காக இவ்விமானம் தயாரானது.
இதனையடுத்து விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த கழிவறையின் தண்ணீர் தொட்டியில் பார்சல் ஒன்று இருந்துள்ளது. இதனை பாதுகாப்பு அலுவலர்கள் எடுத்து பிரித்து பாா்த்தபோது, அதனுள் 740 கிராம் அளவிலான தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த தங்க கட்டிகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் 34 லட்சம் ஆகும். இதனிடையே தங்க கட்டிகளை பாதுகாப்பு அலுவலர்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை கைப்பற்றிய சுங்க அலுவலர்கள், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தங்க கட்டிகளை வைத்துச் சென்ற மர்ம நபரை சுங்கத்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.