தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - கோயம்பேடு பேருந்து நிலையம்

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்து ஓட்டுநர்கள் உள்பட நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர்.

Govt. bus accident
அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

By

Published : Nov 24, 2020, 7:12 AM IST

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று (நவ. 24) இரவு 8.30 மணி அளவில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை வந்த பேருந்து ஒன்று பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது.

அப்போது பாதசாரி ஒருவர் திடீரென்று சாலையை கடக்க முயற்சித்ததால், பேருந்தானது நிலைதடுமாறி சென்டர் மீடியனை தாண்டி எதிர்ப்புறம் சென்றது.

அந்த நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் அரசு பேருந்து வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

கோயம்பேடு அரசு பேருந்து நிலையம் அருகே விபத்து

இதில், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் உள்பட நான்கு பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை பேருந்து ஓட்டுநர் அசோக் குமாரிடம் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிவர் புயல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து - முழு விவரம்

ABOUT THE AUTHOR

...view details