சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தனியார் ஓட்டலில் மேனேஜராக பணிபுரிந்த சீதாராமன், zeebul trading agency என்ற நிறுவனத்தை நடத்தியுள்ளார். இதில் அவரது நண்பர் நெல்லையப்பன் மற்றும் நெல்லையப்பனின் உறவினர் கணேஷ் என்கிற இராமகுருநாதன் ஆகியோர் 27 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதிலிருந்து 10 லட்சம் ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது.
திடீரென பங்குச்சந்தை தொழில் நஷ்டமானதால், லாபத்துடன் சேர்த்து 37 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுக்க ஒரு வருட கால அவகாசம் கேட்டுள்ளார். இந்நிலையில் சீதாராமன் ஆதம்பாக்கம் பகுதியில் தனது மகனை சந்திக்க வரும்போது, எட்டு பேர் கொண்ட கும்பல் சீதாரமனை கடத்திச் சென்றுள்ளது.
அப்போது சீதாராமனை மிரட்டி வெற்று பத்திரத்தில் கையெழுத்தும் அக்கும்பல் வாங்கியுள்ளது. பின்னர் நங்கநல்லூர் சித்தி விநாயகர் கோயில் பகுதியில் சீதாராமனை இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சீதாராமன் புகார் அளித்துள்ளார்.