சென்னை: திருவிக நகர் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள பெண்கள் உடற்பயிற்சி கூடம் அருகே, கடந்த ஜூலை 12 ஆம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் இருவர் குடி போதையில் வந்தனர்.
அவர்கள் அந்த பகுதியிலிருந்த இளைஞர்களை கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த வாகனத்தை சேதப்படுத்துவது போல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த எழிலரசி திருவிக நகர் காவக் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை மூலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பெரவள்ளூரை சேர்ந்த இமான் (எ) ஜெயகுமார் (25), சௌந்தர் (எ) குள்ளாபாய் (21) ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரிக்கும் போது, குடி போதையில் நடந்து கொண்டதாக ஒப்புகொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக இமான் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பூசாரிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கிராம மக்கள்!