தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரத்யேக செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை - 2 பேர் கைது - போதை பொருள் விற்பனை

சென்னையில் பிரத்யேக செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த கும்பலை சேர்ந்த இரண்டு பேரை போதைப் பொருள் வாங்குவதுபோல் நடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்

By

Published : Jul 30, 2022, 8:22 PM IST

சென்னை: வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வடக்கு கடற்கரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மதுரவாயல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மெத்தபெட்டமைன் என்னும் போதைப் பொருளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை பிடிக்க திட்டம் தீட்டிய தனிப்படை போலீசார், போதைப் பொருள் வாங்குபவர்களை போல் நடித்து வெங்கடேஷை தொடர்பு கொண்டனர்.

தன்னிடம் பேசியவர்கள் போலீசார் என்று தெரியாத வெங்கடேஷ், ஒரு கிலோ மெத்தபெட்டமைன் வேண்டும் என்றால் 6 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த 6 லட்ச ரூபாயை செய்தித் தாளில் சுருட்டி வைத்து, அந்தத் தாளின் தேதியில் CASH என எழுதி, அதனை வீடியோவாக எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

சந்தேகம் வந்துவிடாமல் இருக்க அவ்வாறே போலீசாரும் செய்துள்ளனர். பணத்தின் வீடியோவைப் பார்த்து நம்பிக்கையடைந்த வெங்கடேஷ், ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு நேரடியாக வரும்படி கூறினார். இதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேஷ் மற்றும் அவருடைய கூட்டாளி சிவசந்திரன் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெங்கடேஷ் முதுகலை பட்டப்படிப்பு படித்துவிட்டு மருத்துவமனையில் பணியாற்றி வந்ததும், பிறகு வடமாநில நோயாளிகளுக்கு சென்னையில் மருத்துவமனை பிடித்துத்தரும் ஏஜெண்டாக பணியாற்றியதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்

அதன் மூலம் வட-கிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்க தேசத்தில் உள்ள போதைப்பொருள் கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கும்பலிடமிருந்து மொத்தமாக மெத்தபெட்டைமைன் வாங்கி டீ தூள் பாக்கெட்டுகளில் அடைத்து சென்னையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்று வந்தது தெரியவந்தது. ஒரு கிராம் மெத்தபெட்டைமைன் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஒரு கிலோ 25 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் போதைப்பொருள் விற்பனைக்காக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்த கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இந்த பிரத்யேக செயலி மூலம் துப்பு கிடைக்குமா என்பது குறித்து வடக்கு கடற்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தேனி: பட்டப்பகலில் விடுதி உரிமையாளர் வெட்டி படுகொலை

ABOUT THE AUTHOR

...view details