சென்னை:எழும்பூர் காவல் நிலையம் உதவியாளர் ரவிச்சந்திரன் இன்று (செப்.25) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எழும்பூர் பிவி செரியன் ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்தப்போது டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்துள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தின் ஓட்டுநர் பாபுவை அழைத்து விசாரணை செய்த பின்னர், வாகனத்தை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக வெளிநாட்டு நாணயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து ஓட்டுனர் பாபுவையும் வாகனத்தில் இருந்த 25 மூட்டை மலேசியா நாட்டு நாணயங்களையும் பறிமுதல் செய்து எழும்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.