தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் 24ஆம் தேதி எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 32,000 மாணவர்கள் தேர்வினை எழுதுவர் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்வெழுதாத பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதற்காக 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒரு தேர்வு மையத்திற்கு ஐந்து ஆசிரியர்கள் என பணி அமர்த்தப்பட்டனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு மறுதேர்வு எழுதுவதற்கு பள்ளி மாணவர்கள் 175 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 147 பேர் தேர்வினை எழுதியுள்ளனர். அதேபோல் தனித்தேர்வர்களாக 673 பேர் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 372 பேர் தேர்வினை எழுதியுள்ளனர்.