தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதித்தேர்வை எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் - chennai news

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன.

12ஆம் பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது
12ஆம் பொதுத்தேர்வு இன்றுடன் முடிகிறது

By

Published : Mar 24, 2020, 10:36 AM IST

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்கள் பாதுகாப்பாகத் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டுமென, அரை மணி நேரம் தாமதமாகத் தேர்வை தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி, 10.15 மணிக்குத் தொடங்க வேண்டிய தேர்வு, இருமாநிலங்களிலும், 10.45-க்கு தொடங்கியது. இந்தத் தேர்வு 1.45-க்கு முடிவடைகிறது.

மாணவர்கள், 10:30 மணிக்குள், தேர்வு மையங்களை சென்றடைந்துவிட வேண்டும். 10.30 முதல், 10.40 வரையிலான 10 நிமிடங்கள், கேள்வித்தாளைப் படித்துப் பார்க்க வழங்கப்படும். 10.40 முதல் 10.45 வரையிலான ஐந்து நிமிடம், விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க வழங்கப்படும். விடை எழுதுவதற்கான நேரம், 10.45-க்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா பாதிப்புக்கு தனி மருத்துவமனை - சந்தீப் நந்தூரி

ABOUT THE AUTHOR

...view details