தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிவிஎஸ் வாகன விற்பனை 22% உயர்வு - இருசக்கர வாகன விற்பனை

சென்னை: டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனையானது கடந்த அக்டோபர் மாதத்தில் 22% அதிகரித்துள்ளது.

TVS vehicle sales up 22%
TVS vehicle sales up 22%

By

Published : Nov 2, 2020, 10:08 PM IST

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்தாண்டு அக்டோபர் மாத்துடன் ஒப்பிடுகையில் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் (அக்டோபர்) மட்டும் மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 724 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான இருசக்கர வாகன விற்பனை 24 விழுக்காடு அதிகரித்து, மூன்று லட்சத்து 82 ஆயிரத்து 121 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 19 விழுக்காடு அதிகரித்துள்ளது. மோட்டார் வாகன விற்பனை 38 விழுக்காடும், ஸ்கூட்டர் விற்பனை 5 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 33 விழுக்காடு உயர்ந்து, 92 ஆயிரத்து 520 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனை 17.12 விழுக்காடு சரிவடைந்துள்ளது. கடந்தாண்டு 15 ஆயிரத்து 2017 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், தற்போது 12 ஆயிரத்து 603 வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனையில் சரிவு ஏற்பட்ட சூழலில், பண்டிகை காலத்தையொட்டி கடந்த அக்டோபர் மாதத்தில் ஏராளமான நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details