தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களின் உரிமையைப் பறிக்க மோடி யார்? - வேல்முருகன்

சென்னை: மும்மொழித் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு அப்பட்டமாக இந்தியை திணிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

File pic

By

Published : Jun 1, 2019, 4:51 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்த மாநிலத் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு இந்தியையும் கற்பிக்கச் சொல்கிறது மத்திய அரசு. இதை ஆறாம் வகுப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறுகிறது.

இந்த கல்விக் கொள்கை வரைவு பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, ஜூன் 30ஆம் தேதி வரை அதற்கான இமெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் பாஜக மோடி அரசு அறிவித்துள்ளது.

மோசடித் தேர்தல் நடத்தி மீண்டும் பிரதமரான மோடியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. மோசடிக் கல்விக் கொள்கையை இப்போது கொண்டுவருகிறார்.

சனாதன வர்ணாசிரம அடிப்படியிலான கல்விக் கொள்கை இது. மேல்சாதியினருக்கு மட்டுமே கல்வி என்ற மறைபொருளைக் கொண்ட கொள்கை. சூத்திரரையும் பஞ்சமரையும் கல்வியிலிருந்து தானாகவே வெளியேறவைக்கும் கொள்கை.

இந்தியச் சமூகத்தின் ஒட்டுண்ணியாய் இருக்கும் ஒரு மைக்ரோ சிறுபான்மையருக்காகவே உருவாக்கப்பட்ட கொள்கையை, மோசடித் தேர்தலால் இடங்களைக் கூட்டிக்கொண்ட தைரியத்தில் கொண்டுவருகிறார். மாநில உரிமையைப் பறிக்கும் இந்த அரதப் பழசான புராணகால புரட்டுக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்கக் கூடாது.

மும்மொழித் திட்டம் என்ற பெயரில் இது அப்பட்டமான இந்தித் திணிப்பாகும்; தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைப்பதாகும்.

அதேநேரம் தமிழர்களின் உரிமையைப் பறிக்க “மோடி யார்?” எனக் கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! எங்கள் உணர்வோடு விளையாடுவதை மத்திய மோடி அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வேல்முருகன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details