தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது'- வேல்முருகன் வலியுறுத்தல் - hydrocarbon project in Ariyalur

கடலூர், அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

TVK condemns hydrocarbon project in Ariyalur
'ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது'- தவாக வலியுறுத்தல்

By

Published : Jun 16, 2021, 7:16 PM IST

சென்னை:இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் , அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும், கடலூர் மாவட்டம் நெய்வேலி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கும் ஓஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கக் கூடாது என்றும் 3ஆம் கட்ட ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதி முழுமையாக ஒரு வாரம் கூட ஆகவில்லை.

அதற்குள்ளாக, அரியலூர், கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு, உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என தெரிவித்துள்ளார்.

ஆனால், அதையெல்லாம் மதிக்காத ஓஎன்ஜிசி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, ஓஎன்ஜிசி நிறுவனம் அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நிராகரிக்க வேண்டும் என்றும் இதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சனாதன இந்தியாவை ஒழித்து சமத்துவ இந்தியா அமைய பாடுபட வேண்டும் - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details