தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் உதவி இயக்குநர் மரணம்! - accident death

சென்னை: திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி இயக்குநர் சாலையில் சறுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

asst director death

By

Published : Jul 23, 2019, 10:12 AM IST

விருதுநகர் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிஸ்வரன். இவரது நண்பர் பெருமாள், இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். மழை பெய்த சாலையில் வேகமாக சென்றதால் ஏற்படும் விபரீதத்தை உணராமல், முன்னால் சென்ற ஆட்டோவை முந்தி செல்ல முயன்றதில் வாகனத்துடன் சறுக்கி விழுந்தனர். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் தூக்கி வீசப்பட்டு எதிரில் வந்த லாரி மீது மோதி படுகாயமடைந்தார்.

சின்னத்திரை உதவி இயக்குநர் பெருமாள்

தலையில் அடிபட்டதால் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கரவாகனத்தை ஓட்டி வந்த மாரிஸ்வரன் காயமடைந்தார். மேலும், விபத்தில் உயிரிழந்த பெருமாளும் மாரீஸ்வரனும், தொலைக்காட்சித் தொடரில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். தற்போது இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் உதவி கலை இயக்குனர்களாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து மாரீஸ்வரனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details