சென்னை:ஸ்டெர்லைட் ஆலையை மூட நடத்தப்பட்டப் போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கை இன்று(மே 14) தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு - உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி
14:16 May 14
2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, ஏற்பட்ட வன்முறையின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
அந்த ஆணையம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இடைக்கால அறிக்கையை இன்று முதலமைச்சசர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 34 முறை நடத்தப்பட்ட விசாரணையில் 616 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 850 ஆவணங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இடைக்கால அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டபோது, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு உடனிருந்தார்.