தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி, தேசிய அளவில் சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட மாநிலங்களின் குறியீட்டு பட்டியலை மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டது.
அந்த பட்டியலில், ஒட்டுமொத்தப்பிரிவில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலிடம் பிடித்ததை விமர்சித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்... இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு 2019 நம்மிடமிருந்து விடைபெறுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்