அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை நாம் படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையும் எதிர்கொண்டு, அம்மா அவர்களைப் போலவே எதற்கும் அஞ்சாமல் முன்னேறிச் சென்று, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதிப்போம்.
'துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக மே.23 கொண்டாடப்படும்..!' - டிடிவி தினகரன் - AMMK
சென்னை: "தேர்தல் முடிவு வெளியாகும் நாளான மே.23ஆம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக, தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது" என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தபோது பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், பாலகர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்முகத்தோடு வரவேற்ற விதத்தில் தமிழ்நாட்டுடைய நாடித்துடிப்பை நன்கு உணர முடிந்தது. இந்தத் தேர்தலில் சோதனைகள் அதிகம் நமக்கு ஏற்பட்டிருப்பினும் மிகுந்த உற்சாகத்தோடும், வீரத்தோடும், வீரியத்தோடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பணியாற்றியது என்பது கள எதார்த்தம்.
அம்மாவின் கொள்கைகள் வாழவேண்டும். துரோகம் தோற்க வேண்டும் என்ற நம்முடைய எண்ணம் ஈடேறும் நாள் அருகில் வந்துவிட்டது. நாம் வெற்றிக் கோட்டினைத் தொட இருக்கிறோம். மே-23ஐ துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.