தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்! - கொங்கு நாடு விவகாரம்

கொங்கு நாடு குறித்த விவாதம் காரசாரமாக நடந்துவரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும் என்றும், தமிழர்களை சாதிரீதியாகக் கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது எனவும் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

ttv-dhinakaran-tweet-on-kongu-naadu-isssue
தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது- கொந்தளித்த டிடிவி

By

Published : Jul 11, 2021, 12:29 PM IST

சென்னை: ’கொங்கு நாடு தனி யூனியன் பிரதேசமாகிறது’ என்ற தலைப்பில் தனியார் நாளிதழ் எழுதிய கட்டுரை நேற்று (ஜூலை.11) வெளியானது. அதனைக் கண்டித்த பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பெரியாரிவாதிகள் சிலர் அந்த தனியார் நாளிதழ்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாதபோது சுய லாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாகக் கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

ஏற்கெனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்று வரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details