சென்னை கே.கே. நகர் செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த வள்ளி (54). இவர் ஜூலை 24ஆம் தேதி அதே தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஆனந்த வள்ளி கழுத்தில் இருந்த ஒன்பது சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
இதையடுத்து, கே.கே நகர் காவல் நிலையத்தில் ஆனந்த வள்ளி புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கொள்ளையன் முகம்பதிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர்.
பெண்ணிடம் செயின் பறித்த சிசிடிவி காணொலி விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த குல்லா(23), கிண்டியைச் சேர்ந்த சிவகுமார்(18) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து செயினை அறுக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம், கொள்ளையடிக்கப்பட்ட ஒன்பது சவரன் தங்க நகை, ஆயுதம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே குல்லா, தமிழ்செல்வன் மீது 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போன் செய்தால் வீடு தேடிவரும் மதுபானங்கள்; ஆன்லைனில் மது விற்ற இருவர் கைது