சென்னை தலைமைச் செயலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.19) கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவை ஊழியர்கள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழாவில், சபாநாயகர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உண்மை ஒரு நாள் மேலோங்கி நிற்கும் - சாதி பிரச்னைகள் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு - TN Govt
சில கால கட்டங்களில் சாதி, மத ரீதியாக பிரச்னைகள் வந்தாலும், உண்மை ஒரு நாள் மேலோங்கி நிற்கும் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
இந்த விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சில கால கட்டங்களில் சாதி, மத ரீதியாக பிரச்னைகள் வந்தாலும், உண்மை மட்டுமே ஒரு நாள் மேலோங்கி நிற்கும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் என்று வாழ்ந்து வருகிறோம். அனைவருக்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்’ என்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலின் வடிவில் 6 அடி உயர பிரமாண்ட கேக் - திருச்சியில் அசத்தல்!