தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்ரம்ப் விருந்து நிகழ்ச்சியில் எடப்பாடிக்கு அழைப்பு - நேரில் சந்திக்க ஏற்பாடா? - ட்ரம்ப் இந்தியா வருகை

சென்னை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளதாகவும் அங்கு ட்ரம்பை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trump invites TN Cm Edappadi
Trump invites TN Cm Edappadi

By

Published : Feb 23, 2020, 2:30 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது மனைவியுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது ட்ரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப் விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வருகிற 25ஆம் தேதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 24 அல்லது 25ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விருந்தின்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியா கிளம்புகிறார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details