கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவநாதன். இவர் தனது மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த வழக்கில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆயுள் தண்டனை கைதி - ஆயுள் தண்டனை
திருச்சி: மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
suicide
இந்நிலையில், இன்று (ஜூன் 28) காலையில் ஜீவநாதன், தான் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சிறை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கேகே நகர் காவல்துறையினர் அங்கு வந்து ஜீவநாதன் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர். சிறைக் கைதி என்பதால் இதுகுறித்து திருச்சி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.