தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவு வெளியீடு! - result

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

tet result

By

Published : Aug 21, 2019, 11:41 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கு ஜூன் மாதம் 9ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 தேர்வர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்புகள் ஜூலை மாதம் 9ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் தேர்வர்கள் தெரிவிப்பதற்காக ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்ட விடைக்குறிப்புகளின் சந்தேகங்கள் வல்லுநர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் இறுதி விடை குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளிற்கு ஓஎம்ஆர் தாள்கள் திருத்தப்பட்டன. தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்கள் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்து திருத்தப்பட்டது. அப்போது தேர்வுகளில் சிலர் ஓஎம்ஆர் சீட்டில் முறையான தகவல்களை குறியிடாமலும், கருப்பு நிற பேனாவால் முழுமையாக வட்டமிடாமலும் இருந்துள்ளனர். சரியான தகவல்களை அளிக்காத ஓஎம்ஆர் சீட்டுகள் திருத்தம் செய்யாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. சில தேர்வர்கள் தங்களுக்குரிய விருப்பப் பாடமான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் போன்றவை குறித்தும் தெளிவாக குறிப்பிடாமல் இருந்துள்ளனர். இதுபோன்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் திருத்தாமல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 26ஆம் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் 1500-க்கும் மேற்பட்டோர், இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய இறுதிக்கட்டத்தில் இருந்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details