தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாள்தோறும் 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் - அமைச்சர் சிவசங்கர் - Distance from Viralimalai to Dwarankurichi

222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இதுவரை இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Etv BharatTN assembly 2023: 200 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் - அமைச்சர் சிவசங்கர்
Etv BharatTN assembly 2023: 200 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் - அமைச்சர் சிவசங்கர்

By

Published : Jan 12, 2023, 1:37 PM IST

Updated : Jan 12, 2023, 4:14 PM IST

TN assembly 2023: 200 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் - அமைச்சர் சிவசங்கர்

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி வரை நகரப் பேருந்துகள் இயக்க அரசு ஆவண செய்யுமா எனவும், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி 32 கிலோ மீட்டர் என்றும் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5-10 நிமிடத்திற்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதோடு மூன்று நகர பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்த முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், திமுக அரசு பொறுப்பேற்றப்பின், இதுவரை 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், கரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:சட்டப்பேரவையில் ஆளுநரின் பொறுப்பு என்ன? - விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு!

Last Updated : Jan 12, 2023, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details