தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2022, 9:34 PM IST

ETV Bharat / state

போக்குவரத்து துறையை தனியார்மயம் ஆக்கும் நடவடிக்கை இல்லை - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல, அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

பேருந்துகளை நவீனமயமாக்கல் என்பது தனியார்மயமாக்கல் அல்ல - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்
பேருந்துகளை நவீனமயமாக்கல் என்பது தனியார்மயமாக்கல் அல்ல - போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

சென்னை: மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கீழ்கண்டவாறு விளக்கம் அறிக்கை அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது.

மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆலந்தூர் மெட்ரோ ரயில்நிலையப் பெயர்ப்பலகை சாலையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details