தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எங்களது போட்டித் தேர்வு மதிப்பெண்களை வெளியிடுக" - திருநர் கூட்டமைப்பு!

தமிழ்நாடு போட்டித் தேர்வுகளை எழுதும் மூன்றாம் பாலினத்தவர்களின் மதிப்பெண்களை கல்வித்துறை வெளியிட மறுப்பதாக திருநர் கூட்டமைப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் பாலின போட்டித் தேர்வர்களின் மதிப்பெண்களை வெளியிட தமிழ்நாடு அரசு மறுப்பு?
மூன்றாம் பாலின போட்டித் தேர்வர்களின் மதிப்பெண்களை வெளியிட தமிழ்நாடு அரசு மறுப்பு?

By

Published : Feb 7, 2023, 7:16 AM IST

சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திருநங்கை, திருநம்பி கூட்டமைப்பு சமூகத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,"அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்காக போட்டித் தேர்வுகளை எழுதிய, அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் திருநங்கை என்பதற்காகவே இதுவரையில் எங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அரசு அலுவலர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2014ஆம் ஆண்டு NALSA Vs uoi திருநங்கைகளின் அடிப்படை உரிமையை நிலை நாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பை கர்நாடக அரசுதான் அமல்படுத்தி உள்ளது. ஆனால், இதுவரையில் தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. மேலும் மத்திய அரசு பெறுநர் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019ஐ இயக்கினாலும், கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த ஒரு இட ஒதுக்கீடும் அமல்படுத்தவில்லை.

எங்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் எங்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாலேயே, அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். கடுமையான உழைப்பின் மூலம்தான் அரசுத் தேர்வு எழுதுகிறோம். ஆனால் எங்கள் மதிப்பெண்களை வெளியிடுவதில் அரசு அலுவலர்களுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று எங்களுக்கு புரியவில்லை. இவை ஒருதலை பட்சமானது" என்றனர்.

இதையும் படிங்க:பேனா நினைவுச் சின்னம்; மக்கள் கருத்துக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவு செய்வார்: திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details