தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயணைப்பு துறையினர் சார்பில் நடைபெற்ற பயிற்சி முகாம்! - chennai fire station

சென்னை: தண்டையார்பேட்டை அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு உயிரை காப்பாற்றுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர்
தீயணைப்பு துறையினர்

By

Published : Oct 10, 2020, 10:10 AM IST

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு, பேரிடர் காலங்களில் பாதிப்பிலிருந்து உயிரை காப்பாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை தண்டையார்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கிருஷ்ணன், முன்னணி தீயணைப்பு வீரர் அகஸ்தியன் அமர்நாத் தொடங்கிவைத்தனர். அதில் மழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையுடன் இணைந்து பொதுமக்கள், பணியாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அதேபோல் முதலுதவி பயிற்சி, கயிறு முடிச்சுகள் போடும் பயிற்சி, பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, தண்ணீரில் பொதுமக்களை மீட்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மேலும் வீடுகளில் ஏற்படும் தீயை கையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீயணைப்புத்துறை வீரர்கள் வருவதற்கு முன்னதாக அருகில் உள்ள இலை தழைகளை வைத்து தீயை எப்படி அணைப்பது மற்றும் பெட்ஷீட்டை தண்ணீரில் நனைத்து அதைவைத்து தீயை எப்படி கட்டுப்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details