தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூரில் வேலை செய்பவர்கள், படிக்கச் சென்றவர்கள் என அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால் பேருந்து, ரயில்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், வரும் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சூடுபிடிக்க ஆரம்பித்த தீபாவளி பயணச்சீட்டு முன்பதிவு
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை காலம் தொடங்க 120 நாட்களுக்கு முன்பே ரயில்வேயில் முன்பதிவு செய்யும் முறை வழக்கமாக இருந்துவருகிறது. எனவே அக்டோபர் 21ஆம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கியுள்ளது. மேலும் அக்டோபர் 23இல் பயணம் செய்ய முன்பதிவுக்கு 25ஆம் தேதியும், அக்டோபர் 24இல் பயணம் மேற்கொள்ள 26ஆம் தேதியும், அக்டோபர் 25இல் பயணம் செய்ய 26ஆம் தேதியும் முன்பதிவு தொடங்குகிறது.
இதனால் ரயில்வேயில் தீபாவளி பண்டிகைக்கான பயணச்சீட்டு முன்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.