தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரண்டு குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த பெண் - ரயில் முன் பாய்து தற்கொலை

சென்னை: ஆவடி அருகே குடும்பத் தகராறில் இரண்டு ஆண் குழந்தைகளுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Train accident
Train accident

By

Published : Feb 18, 2020, 10:10 AM IST

சென்னை ஆவடிப் பகுதியில் உள்ள செக்காடு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் முத்து. இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு வயதில் கவின் சரண், பிறந்து இரண்டு மாதங்களே ஆன நிஷ்வந்த் என்ற மகனும் உள்ளனர்.

இவர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றும் இதே போல் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் ஆவடி ரயில் நிலையத்திற்கும், ஹிந்து கல்லூரி ரயில் நிலையத்திற்கும் நடுவே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்துள்ளார்.

அப்போது அந்த வழியே வேகமாக வந்த ரயில் மூன்று பேர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியிடம் நூதன முறையில் 5 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்களுகு போலீஸ் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details