தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அபராத விதிப்பை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்’ - டிரைலர் லாரி உரிமையாளர்கள் - சென்னை அண்மைச் செய்திகள்

தொடர்ந்து அதிக பாரம் ஏற்றுவதாக அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக் கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அபராத விதிப்பை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்’ - டிரைலர் லாரி உரிமையாளர்கள்
’அபராத விதிப்பை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தம்’ - டிரைலர் லாரி உரிமையாளர்கள்

By

Published : Sep 28, 2021, 8:37 PM IST

சென்னை: சென்னையின் ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று (செப்.28) அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் எம்.எம்.கோபி பேசுகையில், “கடந்த வாரம் அதிக பாரம் ஏற்றியதாக டிரெய்லர் லாரிகளுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகள், துறைமுக சுங்க அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிறகே கண்டெய்னர்கள் வண்டிகளில் ஏற்றப்பட்டன.

அபராத விதிப்பைக் கண்டித்து போராட்டம்

இந்த கண்டெய்னர்கள் சீல் செய்யப்பட்டிருப்பதால், அதனைப் பிரித்து எடையை குறைக்க முடியாது. அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர், போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் பேசுவதை விடுத்து, டிரைலர் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை கண்டிக்கிறோம்.

அதிக பாரத்துக்காக அபராதம் விதிப்பதில் ஒன்றிய, மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அதிக பாரம் ஏற்றுவதாக அபராதம் வசூலிக்கப்படும் பட்சத்தில், வட்டார போக்குவரத்து அலுவலரை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.

அவ்வாறு நடத்தப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அனைத்து டிரெய்லர் லாரி உரிமையாளர்களும் முழுமையான ஆதரவு தர வேண்டும்” என்றார். இதில் மொத்தம் 12 டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்கங்களைச சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!

ABOUT THE AUTHOR

...view details