சென்னை தாம்பரம் அடுத்த அகரம்தென் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (20) மற்றும் அரவிந்த்குமார் (25) அப்பகுதியில் உள்ள பந்தல் கடையில் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கஸ்பாபுரம் பகுதியில் படவேட்டம்மன் தெருவில் அகஸ்டின் என்பவருக்குச் சொந்தமான புதிய அடுக்குமாடி குடியிருப்பிற்கு இன்று கிரகப்பிரவேசம் நடைபெற இருந்தது.
இதற்காக நேற்று இரவு ஸ்ரீனிவாசன் மற்றும் அரவிந்த்குமார் பந்தல் அமைப்பதற்காக இரண்டாவது மாடியில் இருவரும் இரும்புக் கம்பி கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக அருகே இருந்த உயர் மின் அழுத்த கம்பியில், இரும்புக்கம்பி பட்டதில் இரண்டாவது தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் தலையில் பலத்த காயமடைந்தார்.