சென்னையில் நேற்று மாலை ஆறு மணி முதல் தேவையில்லாமல் யாரும் வெளியே வரவேண்டாம் என ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கரோனா வைரஸ் பெருந்தொற்றின் தீவிரம் புரியாமல் பொதுமக்கள் வெளியே வருவது, கூட்டமாக பயணிப்பது என அலட்சியம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை மறித்து போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஷீத் அறிவுரைகள் வழங்கிவருகிறார். அறியாமையில் வெளியே சுற்றும் மக்களை கடுமையாக நடத்தும் மற்ற மாநில காவல் துறையினருக்கு மத்தியில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரஷீத் கையெடுத்து கும்பிட்டு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.