தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: போக்குவரத்து மாற்றங்கள்!

Independence day 2023: சுதந்திர தின விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் கொடியை ஏற்றி பேருரை ஆற்ற உள்ள நிலையில் சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: போக்குவரத்து மாற்றங்கள்!
சென்னையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: போக்குவரத்து மாற்றங்கள்!

By

Published : Aug 14, 2023, 6:57 PM IST

சென்னை: இந்தியாவில் நாளை (15.08.2023) சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதற்காக காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அணிவகுப்பு நிக்ழ்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

நாளை சுதந்திர தின விழா நடைபெறுவதை ஒட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேருரை ஆற்ற உள்ளார். இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணமாகவும் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான செய்திகள் கூறப்பட்டுள்ளது.

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை அமைந்துள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமைந்துள்ள இராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

இதையும் படிங்க: தேனியில் வண்ண மின்னொளிகளால் ஜொலிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

காமராஜர் சாலையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

பாரிமுனையிலிருந்து இராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை (NFS Road) ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, EVR சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலஜா சிக்னல் சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், NFS சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்" என்று போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆளுநரின் பிடிவாதம் 2 உயிர்களை பலி வாங்கி உள்ளது, ஆளுநர் மனம் இரங்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details