தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 12, 2021, 6:16 PM IST

ETV Bharat / state

இரு மடங்காக உயர்ந்த வாகன விபத்து மரணங்கள்

சென்னை: கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இரு மடங்காக வாகன விபத்து மரணங்கள் உயரந்துள்ளது.

போக்குவரத்து காவல்துறையின் புள்ளி விவரம்
போக்குவரத்து காவல்துறையின் புள்ளி விவரம்

தமிழ்நாட்டில் கரோனாப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரண்டு வருடங்களாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகப் பேருந்து, விமான சேவை என அனைத்தும் தடை செய்யப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருவோர் இ-பதிவு மூலமாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும், விதிகளை மீறி செல்வோர் மீது வழக்குபதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வந்தது. தற்போதும், அது செயல்பாட்டில் உள்ளது.

சென்னையில் கடந்த 2020ஆண்டு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 283 வாகன விபத்துகள் நடந்ததுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில், அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கிய விபத்தில் சிக்கி 62 பேர் படுகாயமடைந்தாகவும், 245 பேர் காயமடைந்ததாகவும், 63 பேர் விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், இந்த ஆண்டு 2021 ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கின் போது 635 வாகன விபத்துகள் நடந்துள்ளது. அதில் 135 பேர் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கிய விபத்தில் சிக்கியதாகவும், 135 பேர் விபத்தில் படுகாயமடைந்ததாகவும், 136 பேர் இறந்ததாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது வாகன விபத்து மரணங்கள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு தளர்வுகளற்ற ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என உயர்நீதிமன்றம், எதிர் கட்சிகள் பலர் தங்களது கண்டத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 1209 வாகன விபத்துகள் நடைபெற்று 233 பேர் விபத்தில் சிக்கி பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி முகாம்: நகராட்சி ஆணையர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details