சென்னை: திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,’இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் கண்டுபிடித்த உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்றுள்ளனர். பெகாசஸ் மென்பொருளை வாங்கிய நாட்டினர் தங்களுடைய அரசியல் எதிரிகள், நீதித்துறையினர், பத்திரிகையாளர் உள்பட சிலரை வேவு பார்க்கின்றனர்.
பெகாசஸ் விவகாரம்
இது தவறு என்று கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகிறோம். பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இது தேச நலனுக்கு எதிரானது.
உரிமைகள், நாட்டின் சுதந்திரம் பறிபோகிறது. தேசிய நலனுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய நாட்டிற்கு வேவு செயலியை தந்திருப்பதாக சான்பிரான்சிஸ்கோவில் உறுதிச் சான்று அளித்துள்ளனர்.